தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இதில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி லக்னோவில் இன்று (மார்ச் 9) நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, தென்ஆப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் லாரா குட்டால் (Lara Goodall) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருப்பினும் 49 ரன்கள் எடுத்திருந்த குட்டால், மான்சி ஜோஷி பந்துவீச்சில் சுஷ்மா வெர்மாவிடம் கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதனையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் ஜூலன் கோஸ்வாமியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 41 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும், கெய்க்வாட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
-
What a way to level the series! 👍👍
— BCCI Women (@BCCIWomen) March 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A fine effort from #TeamIndia as they win the 2nd @Paytm #INDWvSAW ODI by 9⃣ wickets. 👏👏
Scorecard 👉 https://t.co/cJaryEyTw5 pic.twitter.com/ynpnGzrLrI
">What a way to level the series! 👍👍
— BCCI Women (@BCCIWomen) March 9, 2021
A fine effort from #TeamIndia as they win the 2nd @Paytm #INDWvSAW ODI by 9⃣ wickets. 👏👏
Scorecard 👉 https://t.co/cJaryEyTw5 pic.twitter.com/ynpnGzrLrIWhat a way to level the series! 👍👍
— BCCI Women (@BCCIWomen) March 9, 2021
A fine effort from #TeamIndia as they win the 2nd @Paytm #INDWvSAW ODI by 9⃣ wickets. 👏👏
Scorecard 👉 https://t.co/cJaryEyTw5 pic.twitter.com/ynpnGzrLrI
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களில் இஸ்மாயில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தானா - பூனம் ராவத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இந்த இணை அரைசதம் கடந்து, அணியின் வெற்றியை உறுதிசெய்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தானா 80 ரன்களையும், பூனம் ராவத் 62 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினர்.
மேலும் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைச் சமன்செய்துள்ளது.
இதையும் படிங்க: தில்சன் அதிரடியில் இலங்கை லெஜண்ட்ஸ் அபார வெற்றி!