இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றநிலையில், தொடரின் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார். காயம் காரணமாக இந்திய பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகியதால், அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் எந்தவித மாற்றமும் இன்றி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறியது. தொடக்க வீரர்களான எவின் லெவிஸ் 21, ஷாய் ஹோப் 42, ரோஸ்டான் சேஸ் 38, ஹெட்மயர் 37 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 31.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
இந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் - கேப்டன் பொல்லார்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
42 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் சற்று அடக்கி வாசித்த நிக்கோலஸ் பூரான், அதன்பின் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். ஒருமுனையில் பூரான் பவுண்டரிகளை அடிக்க, மறுமுனையில் பொல்லார்ட் சிங்கிள் எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து விளையாடினார்.
குறிப்பாக, ஷர்துல் தாகூர் வீசிய 48ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என அதிரடியாக விளையாடிய பூரான் 89 ரன்களில் ஜடேஜாவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 64 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பூரான் 10 பவுண்டரிகள், மூன்று சிக்சர்களை விளாசினார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 153 ரன்களைச் சேர்த்தது.
பூரான் ஆட்டமிழந்ததையடுத்து, பொல்லார்ட் தனது அதிரடியான ஆட்டத்தை காட்டத் தொடங்கினார். நவ்தீப் சைனி வீசிய 49ஆவது ஓவரிலும், ஷமி வீசிய கடைசி ஓவரிலும் அவர் மொத்தம் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரிகள் என 32 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைக் குவித்தது. பொல்லார்ட் 51 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஏழு சிக்சர் என 74 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
-
West Indies close on 315/5, with Pollard unbeaten on 74 including seven 6️⃣s!
— ICC (@ICC) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The last five overs went for 77 runs 🤯 #INDvWI pic.twitter.com/8lbASB7nLG
">West Indies close on 315/5, with Pollard unbeaten on 74 including seven 6️⃣s!
— ICC (@ICC) December 22, 2019
The last five overs went for 77 runs 🤯 #INDvWI pic.twitter.com/8lbASB7nLGWest Indies close on 315/5, with Pollard unbeaten on 74 including seven 6️⃣s!
— ICC (@ICC) December 22, 2019
The last five overs went for 77 runs 🤯 #INDvWI pic.twitter.com/8lbASB7nLG
டெத் ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் லைன் அண்ட் லெங்த்தைத் தவறவிட்டு ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக கடைசி எட்டு ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஒன்பது பவுண்டரி, ஏழு சிக்சர்கள் என மொத்தம் 105 ரன்களைக் கொடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி இரண்டு, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதையும் படிங்க:இந்திய பவுலர்களே சிறந்தவர்கள் - ஸ்டெயின்