வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸும் மற்றொன்றில் இந்தியாவும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரில் 1-1 என சமநிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் கடந்த மாதம் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியிருந்த நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இதனால் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் விளையாடும் லெவன் அணியிலும் இவர் இடம்பெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
காயத்திலிருந்து மந்தனா மீண்டு(ம்) அணிக்குத் திரும்பியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய அணி: மிதாலி ராஜ் (கே), ஜுலன் கோஸ்வாமி, ஹர்மன்பிரீத் கவுர், புனம் ரவுத், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தானியா பாட்டியா, பிரியா புனியா, ஏக்தா மிஷன், ஸ்மிருதி மந்தனா, சுஷ்மா வர்மா, மான்ஷி ஜோஷி, ஹேமலதா.
இதையும் படிங்க: அணியிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ் வுமன் ஸ்மிருதி மந்தனா!