இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கும் கடந்த போட்டியை போலவே 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது ரசிகர்களிடையே இருந்த ஒரு இளைஞர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு மோதிரம் கொடுத்து இந்திய இளைஞர் ஒருவர் காதலை தெரிவித்தார். அதனை எதிர்பார்க்காத ஆஸ்திரேலியா பெண், அந்த இந்திய இளைஞருக்கு உடனடியாக ஓகே கூறினார்.
இதனை பார்த்த ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தார். நீண்ட நாள்களுக்கு பின் ரசிகர்கள் மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Where dreams come true 💍 ❤️#LoveOurSCG #AUSvIND pic.twitter.com/MqS3XZMaig
— Sydney Cricket Ground (@scg) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Where dreams come true 💍 ❤️#LoveOurSCG #AUSvIND pic.twitter.com/MqS3XZMaig
— Sydney Cricket Ground (@scg) November 29, 2020Where dreams come true 💍 ❤️#LoveOurSCG #AUSvIND pic.twitter.com/MqS3XZMaig
— Sydney Cricket Ground (@scg) November 29, 2020
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் அந்த காதல் இணைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நிச்சயம் ஒலிம்பிக் ரேசில் நான் இருப்பேன்: சாய்னா