ETV Bharat / sports

நாங்கள் நாட்டுக்காக ஆடினோம்... அவர்கள் அவர்களுக்காக ஆடினார்கள்... ரசிகர்களை சீண்டும் இன்சமாம் உல் ஹாக்! - இம்ரான் கான்

நாங்கள் கிரிக்கெட் ஆடிய காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அணிக்காகவும் நாட்டுக்காகவும் ஆடினார்கள். ஆனால் இந்தியர்களோ அவர்களுக்காக சுயநலமாக ஆடினார்கள் எனப் பேசி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹாக் இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார்.

indian-batsmen-played-for-themselves-pakistan-batsmen-played-for-the-team-inzamam-ul-haq

author img

By

Published : Apr 23, 2020, 4:56 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் அனைவருமே வீட்டில் முடங்கியுள்ளனர். இதனிடையே சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, சில வீடியோ நேர்காணல்களில் பங்கேற்பது என விளையாட்டு வீரர்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராசாவுடன், முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹாக் யூட்யூப் நேர்காணலில் பங்கேற்றார். அதில் பேசுகையில், '' இந்திய வீரர்களோடு பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பாகிஸ்தான் வீரர்கள் குறைந்த அளவிலேயே திறமை படைத்தவர்களாகத் தெரிவார்கள். பாகிஸ்தான் வீரர்கள் எப்போதும் தங்களது அணிக்காகவும் நாட்டுக்காகவும் மட்டுமே கிரிக்கெட்டை ஆடினார்கள். ஆனால் இந்திய வீரர்கள் என்றுமே சுயநலமாகவும், தங்களை முன்னிலைப்படுத்தியும்தான் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்றார்கள் எனப் பேசினார்.

அதேபோல் இம்ரான் கான் பற்றிய கேள்விக்கு, '' இம்ரான் பாய் டெக்னிக்கலாக சிறந்த கேப்டன் இல்லை. ஒவ்வொரு வீரரிடமிருந்தும் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் என்றுமே இளம் வீரர்களை அணியிலிருந்து வெளியேற்றமாட்டார். எந்த வீரர் மீதாவது நம்பிக்கை வைத்தால், அவர்களுக்கு தொடர்ந்து நிச்சயம் வாய்ப்புகளை வழங்குவார். அதனால்தான் அவர் சிறந்த கேப்டனாக திகழ்ந்தார்.

ஒரு சில தொடர்களில் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்களை அணியைவிட்டு நீக்காததே அவரின் சிறந்த கேப்டன்ஷிப்க்கு உதாரணம்'' என்றார்.

இந்திய வீரர்கள் பற்றிய இம்சமாம் உல் ஹாக்கின் கருத்துகள் இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நான் விளையாடியதில் இவர்தான் சிறந்த கேப்டன்; ஆனால் அது தோனி கிடையாது: கம்பீர் ஓபன் டாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.