இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டி20 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி மோத இருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதிவரை இர்அண்டு அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடப் போகும் இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளின் பெயர்களை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் விவரம் பின்வருமாறு:
ஒருநாள் தொடர்: மித்தாலி ராஜ்(கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர்(விக்கெட் கீப்பர்), ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, பூனம் ராவத், ஹேமலதா, ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, ராஜேஷ்வரி கெய்க்வாட், தனியா பாட்டியா(விக்கெட் கீப்பர்), ப்ரியா புனியா, சுஷ்மா வர்மா, மான்சி ஜோசி, பூனம் யாதவ், எக்தா பிஸ்த்.
டி20 தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா(விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், மான்சி ஜோசி, அருந்ததி ரெட்டி.
தற்போது இந்திய மகளிர் அணி தென் ஆப்ரிக்கா மகளிர் அணியுடன் டி20 தொடரில் விளையாடிவருகிறது. செப்டம்பர் 29ஆம் தேதி இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெறவிருக்கிறது.