ETV Bharat / sports

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஹாட்ரிக் சாதனை! - இந்தியா

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளதால், ஐசிசி 6.93 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஹாட்ரிக் சாதனை!
author img

By

Published : Apr 1, 2019, 8:36 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிடும் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில்ஆண்டுதோறும் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு ஐசிசியின் தண்டாயுதமும், 6.93 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, ஏப்ரல் 1, 2019 நிலவரப்படி, இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால், இந்திய அணிக்கு மூன்றாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதமும், 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் படி 6.93 கோடி பரிசுத்தொகையும் கிடைக்கவுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கு 5 லட்ச அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் படி 3 கோடியே 46 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, "தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதத்தை தக்கவைப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எந்த அளவிற்கு முக்கியம் என்பது எங்கள் அணிக்கு நன்றாகவே தெரியும். எங்கள் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், எங்களது முழுத் திறனையும் வெளிபடுத்த ஆர்வமாக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.