ETV Bharat / sports

2ஆவது டெஸ்ட்: ரோஹித் அரைசதம்; கில், கோலி ஏமாற்றம்! - அஜிங்கியா ரஹானே

இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்துள்ளது.

India vs England, 2nd Test: Rohit hits fifty, IND 106/3 at lunch

author img

By

Published : Feb 13, 2021, 11:54 AM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.13) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் இளம் வீரர் சுப்மன் கில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் 12ஆவது அரைசதத்தைக் கடந்தார். இந்நிலையில், 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாரா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி, ரன் ஏதுமின்றி மோயீன் அலி வீசிய பந்தில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து வந்த துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே, ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 80 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீக், ஒல்லி ஸ்டோன், மோயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்; குல்தீப், சிராஜ், அக்சர் சேர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.