இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.13) சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டமான இன்று (பிப்.14) காலை முதல் செஷனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை 329 ரன்களுக்கு முடித்தது.
இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்களையும், அஜிங்கியா ரஹானே 67 ரன்களையும், ரிஷப் பந்த் 58 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மோயீன் அலி 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் - டோமினிக் சிப்லி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இன்னிங்ஸின் முதலாவது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ரோரி பர்ன்ஸை வெளியேற்றி அசத்தினார்.
-
A wicket on the third ball of the innings for India!
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ishant Sharma has dismissed Rory Burns lbw for a duck ☝️#INDvENG | https://t.co/DSmqrU68EBpic.twitter.com/i1OWEoVBSN
">A wicket on the third ball of the innings for India!
— ICC (@ICC) February 14, 2021
Ishant Sharma has dismissed Rory Burns lbw for a duck ☝️#INDvENG | https://t.co/DSmqrU68EBpic.twitter.com/i1OWEoVBSNA wicket on the third ball of the innings for India!
— ICC (@ICC) February 14, 2021
Ishant Sharma has dismissed Rory Burns lbw for a duck ☝️#INDvENG | https://t.co/DSmqrU68EBpic.twitter.com/i1OWEoVBSN
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டோமினிக் சிப்லி 16 ரன்களில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த கேப்டன் ஜோ ரூட், இந்த இன்னிங்ஸில் 9 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் பட்டேல் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - டேனியல் லாரன்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பைத் தடுக்க முயற்சித்தது. ஆனால், 9 ரன்கள் எடுத்திருந்த லாரன்ஸ் அஸ்வினிடம் விக்கெட்டை கொடுத்து அட்டமிழந்தார்.
-
A 👌 session for India!
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
After posting 329, they reduced England to 39/4 before lunch!
Can England fight back in the second session? #INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/u8n67qbdXF
">A 👌 session for India!
— ICC (@ICC) February 14, 2021
After posting 329, they reduced England to 39/4 before lunch!
Can England fight back in the second session? #INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/u8n67qbdXFA 👌 session for India!
— ICC (@ICC) February 14, 2021
After posting 329, they reduced England to 39/4 before lunch!
Can England fight back in the second session? #INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/u8n67qbdXF
இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் பென்ஸ்டோக்ஸ் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா!