ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளனர். மேலும் இந்திய அணியோடு கூடுதல் பந்துவீச்சாளர்களாக கார்த்திக் தியாகி, நாகர்கொட்டி, இஷான் பரேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரோனா தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துள்ள இந்திய வீரர்கள், இத்தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் கூடுதல் பந்துவீச்சாளர்களும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பயிற்சியின் போது இளம் வீரர் கார்த்திக் தியாகிக்கு பந்துவீச்சு குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் தியாகி மற்றும் பும்ராவை டேக் செய்து, “இந்த பயணத்தின் போது சிறந்த வீரர்களுடைய வழிகாட்டுதலை பெருவது உங்கள் வாழ்வின் சிறப்பான தருணமாக அமையும்” என்று பதிவிட்டுள்ளது.
-
When you have best in the business to guide you in your journey. @Jaspritbumrah93 @tyagiktk #TeamIndia pic.twitter.com/oDUt2ucu2s
— BCCI (@BCCI) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When you have best in the business to guide you in your journey. @Jaspritbumrah93 @tyagiktk #TeamIndia pic.twitter.com/oDUt2ucu2s
— BCCI (@BCCI) November 25, 2020When you have best in the business to guide you in your journey. @Jaspritbumrah93 @tyagiktk #TeamIndia pic.twitter.com/oDUt2ucu2s
— BCCI (@BCCI) November 25, 2020
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவ.27) தொடங்கவுள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க:‘அனைத்துத் தாய்மார்களுக்கும்...!’ - சானியா மிர்சாவின் உருக்கமான கடிதம்