டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக டெஸ்ட் அணிகள் நம்பருடன் கூடிய புதிய ஜெர்சி உடையில் டெஸ்ட் தொடரில் ஆடிவருகின்றன. இந்நிலையில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நம்பருடன் கூடிய புதிய ஜெர்சியுடன் ஆட உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நேற்று இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி வீரர்கள் நம்பருடன் கூடிய புதிய ஜெர்சியில் ஆடிவருகின்றனர்.
-
Our openers are off! #TeamIndia won the toss and will have a bat first against West Indies A 🏏🏏 pic.twitter.com/uV0AUnzQGT
— BCCI (@BCCI) August 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our openers are off! #TeamIndia won the toss and will have a bat first against West Indies A 🏏🏏 pic.twitter.com/uV0AUnzQGT
— BCCI (@BCCI) August 17, 2019Our openers are off! #TeamIndia won the toss and will have a bat first against West Indies A 🏏🏏 pic.twitter.com/uV0AUnzQGT
— BCCI (@BCCI) August 17, 2019
முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா, ரோகித் சர்மா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய புஜாரா சதமடித்தபின் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் தனது பங்கிற்கு அரைசதமடித்து விக்கெட்டை இழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது.
இந்திய அணி சார்பில் ஹனுமா விஹாரி 37 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னிலும் களத்திலுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கார்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.