கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, இம்மாதம் நடைபெறவிருந்த 13ஆவது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் தோனி விளையாடும் விதம் பொறுத்தே அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்புத் தரப்படுமென தேர்வு குழுவினர் தெரிவித்ததையடுத்து, அனைவரது கவனமும் தற்போது தோனியின் மீது திரும்பியுள்ளது.
இந்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் பானர்ஜி, இந்திய தேர்வுக் குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் தோனி குறித்து பேசிய கேசவ், “உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு அனுபவம் தேவை. ஆனால் ரிஷப் பந்த் இன்னும் கற்றுக்கோண்டுதான் உள்ளார்.
நீங்கள் கே.எல்.ராகுலை உலகக்கோப்பைத் தொடரில் விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது சரியான முடிவாக இருந்தாலும், தோனி போன்ற ஒருவர் இருக்கையில் தேர்வுக்குழுவினர் அனுபவத்தை சார்ந்து முடிவெடுப்பது சிறந்தது. மேலும் தோனிக்கு பந்துவீச்சாளர்களைப் எப்படி பயன்படுத்துவது என்பது தெரியும்.
அவர் உலகக்கோப்பைக்குப் பிறகு எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்வில்லைதான், இருப்பினும் அவர் ஐபிஎல் தொடருக்குத் தயாராகவே இருந்தார். இதுகுறித்து நானும் அவருடன் பேசினேன், அவர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ளும் போது நேரில் சென்று பார்த்தேன். ஆனல் பயிற்சி மேற்கொள்ளும் போது, தோனி இவ்வளவு காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகியது போலத்தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக் போட்டி: வீரர்களுக்கு மீண்டும் தகுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறதா?