2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின் நட்சத்திர வீரர் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ளார். ஆறு மாதத்திற்கும் மேலாக தோனி கிரிக்கெட்டிற்கு திரும்பாததால், தோனியுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இருந்தபோதிலும் தோனியின் தேவை வரும் டி20 உலகக்கோப்பைக்கு அவசியம் என இந்திய நிர்வாகத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டுவருகிறது.
தோனிக்குப் பதிலாக ஆடிவரும் ரிஷப் பந்த் இன்னும் தோனியின் இடத்தை நிரப்பவில்லை என்பது அவருடைய செயல்பாடுகளை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இதனால் தோனியின் இடத்தில் ஆடுவதற்கு சரியான மாற்று வீரரைத் தேர்ந்தெடுப்பதில் இந்திய அணி தடுமாறிவருகிறது.
இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், ''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடியது. ஒருவழியாக இந்திய நிர்வாகம் தோனிக்கான மாற்று வீரரை அடையாளம் கண்டுவிட்டது. அந்த வீரர் மனீஷ் பாண்டே தான். நிச்சயம் அவர் தோனியின் இடத்தை நிரப்புவார். இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் உள்ளார். அவரால் இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரித்துள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் சச்சின்