ETV Bharat / sports

Ind vs Eng: சென்னையில் விராட் கோலி; வீரர்களுக்கு தொற்று இல்லை! - கரோனா தொற்று

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இருநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

india-captain-virat-kohli-arrived-at-the-chennai-airport

author img

By

Published : Jan 28, 2021, 7:18 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.

இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் நேற்று (ஜன.27) விமானம் மூலம் சென்னை வந்தனர். வீரர்கள், அணி ஊழியர்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, தனியார் நட்சத்திர விடுதியில் ஒரு வாரகாலம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருந்ததால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விடுப்பு எடுத்திருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னையில் விராட் கோலி

அங்கிருந்து கார் மூலம் தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்ற அவர், சக வீரர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸின் ஹோப் சகோதரர்களுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.