உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ஃப்ளோரிடாவில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்தெடுத்துள்ளது. இந்த போட்டியில் டோனி விளையாடாத நிலையில், காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஷிகர் தவான் விளையாடுகிறார்.
இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவான்,விராட் கோலி(கேப்டன்), ராகுல், ஜடேஜா, நவ்தீப் சைனி, ரிஷப் பந்த், குர்னல் பாண்டியா, புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, வாசிங்டன் சுந்தர், கலீல் அகமத்
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜான் காம்பெல், லெவிஸ், பூரான், ஹெட்மயர், பொல்லார்ட், பிராத்வெய்ட், சுனில் நரேன், கீமோ பால், காட்ரல், ஆஸ்தான் தாமஸ், ரோவ்மன் பொவெல்