இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் டெஸ்ட் போட்டியாக நாளை கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி முடிந்தபிறகு, பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், கோலி தலைமையிலான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் தோனி மீண்டும் இடம்பெறவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஹாட்ரிக் உட்பட ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய தீபக் சாஹர், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல் ரவுண்டர் சிவம் துபே ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்களான ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குருணல் பாண்டியா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்விரு வீரர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் ரிஎன்ட்ரி தந்துள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
டி20 அணி: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.
ஒருநாள் அணி: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், சிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்
கோலி நேற்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் பார்ட்னர் இன் க்ரைம் என தோனியுடன் எடுத்தப் புகைப்படத்தை வெளியிட்டார். இதனால், தோனி இந்தத் தொடரில் விளையாடுவார் என ரிசகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல், தோனியும் சமீபத்தில் பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால், நிச்சயம் இந்தத் தொடரில் தோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இல்லாதது அவரது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
உலகக்கோப்பைக்கு பிறகு தோனி இல்லாமல் இந்திய அணி களமிறங்கும் மூன்றாவது தொடர் இதுவாகும். முதலில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அவர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் அவர், தானே அணியிலிருந்து விலகினார். பின், தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாமல் இருந்த அவர், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் சேர்க்கப்படவில்லை.
-
ALERT🚨: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ALERT🚨: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019ALERT🚨: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019