இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியும், திருவனந்தப்புரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி மும்பையில் இன்று நடைபெற்றுவருகிறது.
-
West Indies have won the toss and will bowl first in the third and final T20I against #TeamIndia.#INDvWI pic.twitter.com/EyOKQn8Poa
— BCCI (@BCCI) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Indies have won the toss and will bowl first in the third and final T20I against #TeamIndia.#INDvWI pic.twitter.com/EyOKQn8Poa
— BCCI (@BCCI) December 11, 2019West Indies have won the toss and will bowl first in the third and final T20I against #TeamIndia.#INDvWI pic.twitter.com/EyOKQn8Poa
— BCCI (@BCCI) December 11, 2019
இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு முதலில் பந்துவீச தீர்மானித்தார். இப்போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோருக்குப் பதிலாக முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணி எந்தவித மாற்றமுமின்றி இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது.