இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 400 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
-
What a champion bowler 🔝😎
— BCCI (@BCCI) February 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
4️⃣0️⃣0️⃣ Test wickets for @ashwinravi99 and we're sure there's still many more to come 👌🏻🤗
Fastest Indian to achieve this milestone 🔥🇮🇳@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Follow the match 👉 https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/QyvRUr9e4Y
">What a champion bowler 🔝😎
— BCCI (@BCCI) February 25, 2021
4️⃣0️⃣0️⃣ Test wickets for @ashwinravi99 and we're sure there's still many more to come 👌🏻🤗
Fastest Indian to achieve this milestone 🔥🇮🇳@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Follow the match 👉 https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/QyvRUr9e4YWhat a champion bowler 🔝😎
— BCCI (@BCCI) February 25, 2021
4️⃣0️⃣0️⃣ Test wickets for @ashwinravi99 and we're sure there's still many more to come 👌🏻🤗
Fastest Indian to achieve this milestone 🔥🇮🇳@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Follow the match 👉 https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/QyvRUr9e4Y
அதேநேரம் சர்வதேச அரங்கில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அஸ்வின் இதனை தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதே சாதனையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க:ஹிட்மேன் சாதனையை முறியடித்த கப்தில்!