ETV Bharat / sports

Ind vs Eng: சென்னை வந்தடைந்த வீரர்கள்! - விராட் கோலி

சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.

ind-vs-eng-players-entered-to-chennai-and-quarantined

author img

By

Published : Jan 27, 2021, 1:06 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.

இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனால், இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இன்று (ஜன.27) விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தற்போது சென்னை வந்துள்ள வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, தனியார் நட்சத்திர விடுதியில் ஒரு வாரகாலம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

சென்னை வந்தடைந்த வீரர்கள்

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரவு 9.30 மணியளவில் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளார். பிறகு அவரும் மற்ற அணி வீரர்களுடன் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்படவுள்ளார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: கரோனா நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் நடால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.