இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 05ஆம் தேதி சென்னையில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதில், முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 578 ரன் எடுத்து இங்கிலாந்து அணி டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை மட்டும் எடுத்தது. பின்னர், 241 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, அஸ்வினின் அபார பந்துவீச்சால் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் இந்தியா அணியின் வெற்றிக்கான இலக்காக 420 ரன்களை நிர்ணயித்தது.
இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ரோஹித் சர்மா 12 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை ஏமாற்றினர். பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் கேப்டன் விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைத் தோல்விலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
இதில், அரைசதம் கடந்த கையோடு சுப்மன் கில் பெவிலியன் திரும்ப, பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், ஜேக் லீச் ஆகியோரது அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் தொடர்ந்து போராடி வந்த கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். அவரும் 72 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
-
ENGLAND WIN 🎉
— ICC (@ICC) February 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
An all-round performance by the visitors has given them a 227-run victory over India.
The lead the four-test series 1-0!#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/luS7HAcWIm
">ENGLAND WIN 🎉
— ICC (@ICC) February 9, 2021
An all-round performance by the visitors has given them a 227-run victory over India.
The lead the four-test series 1-0!#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/luS7HAcWImENGLAND WIN 🎉
— ICC (@ICC) February 9, 2021
An all-round performance by the visitors has given them a 227-run victory over India.
The lead the four-test series 1-0!#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/luS7HAcWIm
இறுதியில், 58.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 192 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் இரட்டை சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IND vs ENG: சுழலில் மாயாஜாலம் செய்த அஸ்வின்; 420 ரன்கள் இலக்கு - பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்