ETV Bharat / sports

இரண்டாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்து

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

author img

By

Published : Mar 26, 2021, 2:00 PM IST

Updated : Mar 26, 2021, 2:41 PM IST

IND - ENG 2nd ODI
ind-vs-eng-2nd-odi-england-chose-to-bowl

புனே: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச்.26) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் தொடரில் இருந்து விலகியதால் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் மார்கன், பில்லிங்ஸ் காயம் காரணத்தால் டேவிட் மாலன், அறிமுக வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கும், மார்க் வுட்டுக்கு பதிலாக ரீஸ் டோப்லிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அதில் ரஷித், ரீஸ் டோப்லி.

Last Updated : Mar 26, 2021, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.