பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசிப்போட்டி இன்று (ஜன.15) பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியும், ஒன்றில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளது. மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதனால், இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டியாக இப்போட்டி அமைந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
-
Welcome to Test cricket, @Natarajan_91 🤩
— ICC (@ICC) January 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thangarasu Natarajan becomes the first Indian player to make his International debut across all three formats during the same tour 👏#AUSvIND pic.twitter.com/CKltP2uT5w
">Welcome to Test cricket, @Natarajan_91 🤩
— ICC (@ICC) January 14, 2021
Thangarasu Natarajan becomes the first Indian player to make his International debut across all three formats during the same tour 👏#AUSvIND pic.twitter.com/CKltP2uT5wWelcome to Test cricket, @Natarajan_91 🤩
— ICC (@ICC) January 14, 2021
Thangarasu Natarajan becomes the first Indian player to make his International debut across all three formats during the same tour 👏#AUSvIND pic.twitter.com/CKltP2uT5w
முன்னதாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு, இந்திய அணியின் 300ஆவது டெஸ்ட் வீரராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதேபோல், மற்றொரு தமிழ்நாடு வீரரான வாஷிங்டன் சுந்தரும் இன்றைய போட்டியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
-
Another proud moment for a debutant! 😄
— ICC (@ICC) January 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Well done to @Sundarwashi5, who makes his Test debut for India at the Gabba.#AUSvIND pic.twitter.com/hGCIW3pFT2
">Another proud moment for a debutant! 😄
— ICC (@ICC) January 14, 2021
Well done to @Sundarwashi5, who makes his Test debut for India at the Gabba.#AUSvIND pic.twitter.com/hGCIW3pFT2Another proud moment for a debutant! 😄
— ICC (@ICC) January 14, 2021
Well done to @Sundarwashi5, who makes his Test debut for India at the Gabba.#AUSvIND pic.twitter.com/hGCIW3pFT2
ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11ஆவது வீரர் என்ற பெருமையையும் நாதன் லயன் பெற்றுள்ளார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், செட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (கே), மயாங்க் அகவர்வால், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், நடராஜன் தங்கராசு.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், காமரூன் கிரீன், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹசில்வுட்.
இதையும் படிங்க: 'அஸ்வின் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புண்டு' - முத்தையா முரளிதரன்!