இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் இன்று சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனபடி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்ற மளித்தனர். அதன் பின்னர் வந்த ஹனுமா விஹாரியும் 15 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - சட்டேஸ்வர் புஜாரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை உயர்த்தியது. மேலும் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். தொடர்ந்து விளையாடி வந்த புஜாரா 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
End of Day 1: Ajinkya Rahane's unbeaten 108, Cheteshwar Pujara's 54 take Indians to 237/8 at stumps. pic.twitter.com/KQ6TX3fLMt
— BCCI (@BCCI) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">End of Day 1: Ajinkya Rahane's unbeaten 108, Cheteshwar Pujara's 54 take Indians to 237/8 at stumps. pic.twitter.com/KQ6TX3fLMt
— BCCI (@BCCI) December 6, 2020End of Day 1: Ajinkya Rahane's unbeaten 108, Cheteshwar Pujara's 54 take Indians to 237/8 at stumps. pic.twitter.com/KQ6TX3fLMt
— BCCI (@BCCI) December 6, 2020
அவரைத் தொடர்ந்து வந்த சஹா, அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரஹானே சதமடித்து அசத்தினார்.
-
Ajinkya Rahane leading from the front! 👍👍
— BCCI (@BCCI) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
He brings up his hundred as Indians move to 212/7 after 84 overs. pic.twitter.com/Zjn7Lzr8Et
">Ajinkya Rahane leading from the front! 👍👍
— BCCI (@BCCI) December 6, 2020
He brings up his hundred as Indians move to 212/7 after 84 overs. pic.twitter.com/Zjn7Lzr8EtAjinkya Rahane leading from the front! 👍👍
— BCCI (@BCCI) December 6, 2020
He brings up his hundred as Indians move to 212/7 after 84 overs. pic.twitter.com/Zjn7Lzr8Et
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 108 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேம்ஸ் பாட்டின்சன் 3 விக்கெட்டுகளையும், நேசர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:AUS vs IND:டி20 தொடரிலிருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!