ETV Bharat / sports

யு19 உலகக் கோப்பை: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம்... பாகிஸ்தானை பந்தாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

author img

By

Published : Feb 4, 2020, 9:10 PM IST

யு19 உலகக் கோப்பைத் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ICC U-19 World Cup: Yashasvi Jaiswal scored century as India thrash Pakistan by 10 wickets to enter final

யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. இதுவரை இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் ஒன்பது முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் பாகிஸ்தான் அணி ஐந்து முறையும், இந்திய அணி நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளது.

அதில், இந்திய அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா அல்லது இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களும் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரோஹைல் நசிர் 62 ரன்களிலும் தொடக்க வீரர் ஹைதர் அலி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஷ்ரா மூன்று விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுளும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதர்வா அங்கோலேக்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

ICC U-19 World Cup
திவ்யான்ஷ் சக்சேனா

இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த யஷஸ்வி ஜெய்வால், இன்றைய ஆட்டத்திலும் எந்த வித பதற்றமும் இல்லாமல் சிறப்பாகவே விளையாடினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து அவரது ஒவ்வொரு ஷாட்டும் நேர்த்தியாகவே இருந்தது.

Yashasvi Jaiswal
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - திவ்யான்ஷ் சக்சேனா

மறுமுனையில், திவ்யான்ஷ் சக்சேனா ஜெய்ஸ்வாலுக்கு ரொடேட் செய்து விளையாடினார். ஒருபக்கம் திவ்யான்ஷ் சக்சேனாவின் நிதானமான ஆட்டம், மறுபக்கம் ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டம் என இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தவித்தனர்.இதனால், இந்திய அணியின் வெற்றிக்கு 87 பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

Yashasvi Jaiswal
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த நிலையில், 97 ரன்களுடன் ஸ்ட்ரைக்கிலிருந்த ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து மேட்சை ஃபினிஷ் செய்ததது மட்டுமில்லாமல், இந்த தொடரில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இதன்மூலம், இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்களை எட்டி இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் உட்பட 103 ரன்களிலும், திவ்யான்ஷ் சக்சேனா 99 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உட்பட 59 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெல்லும் நான்காவது போட்டி இதுவாகும்.

Yashasvi Jaiswal
ஆட்டநாயகன் விருதுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதில், வெற்றிபெறும் அணியுடன் இந்திய அணி பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. இப்போட்டியில் பவுலிங்கில் ஒரு விக்கெட்டும், பேட்டிங்கில் சதமும் விளாசி அசத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: 11 வயதில் பானிபூரி பாய்... 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் - யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பெருமிதம்!

Intro:Body:

dd

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.