ETV Bharat / sports

"நமஸ்தே ட்ரம்ப்" - சச்சின், கோலியைப் புகழ்ந்த அமெரிக்க அதிபர்!

அகமதாபாத்: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

ICC takes jibe at Donald Trump for calling Sachin Tendulkar "Soo-chin"

author img

By

Published : Feb 24, 2020, 9:53 PM IST

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானிய ட்ரம்ப் ஆகியோர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், இந்தியாவை அமெரிக்கா நேசித்து மதிக்கிறது. இந்திய மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கும்.

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நாடைபெற்ற மொடீரா மைதானம்
மொடீரா மைதானத்தில் நடந்த 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கூடியிருந்த பொது மக்கள்.

டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கால்பந்து மைதானத்தில் மோடியை வரவேற்றோம். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை இந்தியா வரவேற்றுள்ளது. தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்களின் சாதனைகளை கொண்டாடும் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது என்று புகழ்ந்து பேசினார்.

மொடீரா மைதானத்தில் உரையாற்றிய ட்ரம்ப்
மொடீரா மைதானத்தில் உரையாற்றும் ட்ரம்ப்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி ட்ரம்ப் பேசியதும், மொடீரா மைதானத்தில் கூடியிருந்த மக்களின் உற்சாக மிகுதியால் எழுந்த சப்தத்தால் மைதானமே அதிர்ந்தது. இரு வீரர்களும் தங்களது திறமையினால் உலக நாடுகளை தங்களது புகழ்பாடவைத்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: காயத்திலிருந்து மீண்டு இன்றைய போட்டியில் களமிறங்கும் தவான், புவனேஷ்வர், பாண்டியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.