சென்னை: கடந்த ஒருவார காலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. இந்நிலையில் தற்போது ஓரளவு மழை குறைய தொடங்கிய நிலையில் ஆங்காங்கே நின்று நின்று மழை பொழிந்து வருகிறது. இந்த ஒரு வாரத்திற்கான மழை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பூதலூர் (தஞ்சாவூர்), துவாக்குடி AWS (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி) தலா 5, குன்னூர் PTO (நீலகிரி), குன்னூர் AWS (நீலகிரி), கேத்தி (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கீழச்செருவை (கடலூர்) தலா 3, கின்னக்கோரை (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), தழுதலை (பெரம்பலூர்), உதகமண்டலம் AWS (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), கோத்தகிரி (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கல்லணை (தஞ்சாவூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 2 பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக பாளையங்கோட்டை 33.5 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு 17.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
டிசம்பர் 4 மற்றும் 5: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 6 முதல் 10 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: ஐந்து மாதம் கூட தாங்கல! மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் - பொதுப்பணித்துறை விளக்கம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
டிசம்பர் 4: தமிழக கடலோரப்பகுதிகளான வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 4 முதல் 8 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகளான லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 5: தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 6: தெற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.