13ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் விளையாடுகின்றன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து சென்னையின் சின்னதல ரெய்னா சொந்த காரணங்களுக்காக விலகினார். இதனால் சென்னை அணிக்காக மூன்றாவது இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில், ''தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், நான் ராயுடுவையே மூன்றாம் இடத்தில் வைப்பேன். சென்னை அணிக்காக ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து ரெய்னாவே மூன்றாம் இடத்தில் ஆடுவார். அவர் திடீரென விட்டுச்சென்றது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சென்னை அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நிச்சயம் மூன்றாம் இடத்தில் ஆடும் வீரரைக் கண்டறியவதில் சென்னை அணிக்கு ப்ரஷ்ர் இருக்கும்.
ஒரு தலைவராக தோனிக்கும், பயிற்சியாளராக ப்ளெமிங்கிற்கும் யாரை மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்குவது என்பது தெரியும். ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாததால் மற்ற வீரர்களை கண்டறிய வேண்டும். ஐக்கிய அரபு அமீரக மைதானங்களை சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், சென்னை அணிக்கு பெரிதாக பிரச்னையில்லை. ஏனென்றால் தாஹிர், சான்ட்னர், சாவ்லா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள்'' என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் மோர்கன், கம்மின்ஸ் - உறுதி செய்த கேகேஆர்!