ETV Bharat / sports

'தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றதற்கு எனது நிறமே காரணம்' - ஜான்டி ரோட்ஸ் - South African Rugby

எனது கிரிக்கெட் ஆட்டத்தின் சராசரிகள் குறைவாக இருந்தபோதும், எனது நிறத்தினால் மட்டுமே தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் இடம் கிடைத்தது என ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

i-literally-was-competing-only-with-white-players-jonty-rhodes

author img

By

Published : Jan 22, 2020, 12:57 PM IST

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஆடும் 11 வீரர்களில் 5:6 என்ற விகிதத்தில்தான் வெள்ளை நிற வீரர்கள் சேர்க்கப்படவேண்டும். இதுகுறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பேசுகையில், ''கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளை நிற வீரர்களுடன் போட்டியிட்டதால் மட்டுமே அணியில் எனக்கு இடம் கிடைத்தது. இதுகுறித்து பேசினால் சமூக வலைதளங்களில் நிச்சயம் விவாதங்கள் எழும். அதனை அறிந்தே சொல்கிறேன். அன்றையக் காலகட்டத்தில் எனது கிரிக்கெட் சராசரிகள், மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது.

அனைத்து வீரர்களுடன் போட்டியிட்டிருந்தால், எனக்கு அணியில் இடம் இருந்திருக்காது. கடந்த 30 வருடங்களாக தென் ஆப்பிரிக்க அணியில் 4 வெள்ளை நிற வீரர்கள் இடம்பெற்றால், 2 கருப்பின வீரர்கள் இடம்பெறவேண்டும். அதுதான் விதி. அந்த விதிக்கு முழுமையான ஆதரவளிக்கிறேன்.

ஜான்டி ரோட்ஸ்
ஜான்டி ரோட்ஸ்

தென் ஆப்பிரிக்காவின் சரித்திரத்தில் நிறவெறிக்கான தடயங்கள் உள்ளன. அது இன்றும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நிறவெறியை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு நாம் கடத்தப்போகிறோம் என்ற கேள்வி என்னுள் அடிக்கடி எழுகிறது. இன்றும் நிறவெறித் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. கருப்பின மக்களுக்கு அரசியல் ரீதியாக சுதந்திரம் இருந்தாலும், அவர்களுக்கான பொருளாதார சுதந்திரம் இன்னும் கிடைக்கவே இல்லை. சமூகத்தில் இன்னும் கீழ்நிலையில்தான் உள்ளனர்.

கடந்த 20 வருடங்களாக சமூகத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு நாம் வாய்ப்புகளை வழங்கவில்லை. இது நிறவெறி பற்றியது அல்ல. எனது கேள்வி அவர்களுக்கான சம வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதுதான். அதனை நாம் செயல்படுத்துவதும் இல்லை.

தென் ஆப்பிரிக்காவின் ரக்பி அணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. சமூகத்தில் பின்தங்கிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரக்பி வீரர்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பினை ரக்பி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சிறந்த வீரர்களை உருவாக்கவேண்டும்'' என்றார்.

முன்னதாக, 2019ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ரக்பி உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தான் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த உலகக்கோப்பையைக் கையில் ஏந்தியது கேப்டன் சியா கோல்சி. கருப்பினவரான கோல்சி இளமையில் ஒருவேளை உணவிற்காக கஷ்டப்பட்டவர். அப்படியான சமூகப் பின்புலங்களிலிருந்து வரும் வீரர்களைத் தேர்ந்தெடுத்து தென் ஆப்பிரிக்க அணியை உருவாக்கவேண்டும் என ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: ’ஃபீல்டிங் பருந்து’ ஜான்டி ரோட்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து

Intro:Body:

'I literally was competing only with white players' - Jonty Rhodes

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.