உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததிலிருந்து இந்திய வீரர் தோனி இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். இவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
-
.@msdhoni’s first net session after a long long break.
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Retweet if you can’t wait to see him back!😇😍#Dhoni #MSDhoni #Ranchi #JSCA pic.twitter.com/2X6kbQNYMG
">.@msdhoni’s first net session after a long long break.
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 15, 2019
Retweet if you can’t wait to see him back!😇😍#Dhoni #MSDhoni #Ranchi #JSCA pic.twitter.com/2X6kbQNYMG.@msdhoni’s first net session after a long long break.
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 15, 2019
Retweet if you can’t wait to see him back!😇😍#Dhoni #MSDhoni #Ranchi #JSCA pic.twitter.com/2X6kbQNYMG
இந்நிலையில், 125 நாட்களுக்குப் பிறகு அவர் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் வலைப்பயிற்சியில் மேற்கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் டி20 தொடரில் தோனி இந்திய அணியில் ரிஎன்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Had a great time playing golf with @msdhoni @rpsingh 🏌️ pic.twitter.com/Tw6NYEacv8
— IamKedar (@JadhavKedar) November 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had a great time playing golf with @msdhoni @rpsingh 🏌️ pic.twitter.com/Tw6NYEacv8
— IamKedar (@JadhavKedar) November 16, 2019Had a great time playing golf with @msdhoni @rpsingh 🏌️ pic.twitter.com/Tw6NYEacv8
— IamKedar (@JadhavKedar) November 16, 2019
இந்த நிலையில், இந்திய வீரர் கேதகர் ஜாதவ், தோனி, ஆர்.பி. சிங் ஆகியோருடன் கோல்ஃப் விளையாடும்போது எடுத்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: தோனியின் டெஸ்ட் சாதனையை முறியடித்த கிங் கோலி