இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக, சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மும்பையிலிருந்து கோவைச் சென்ற விமானத்தில் தனது பேட்டை காணவில்லை என ஹர்பஜன்சிங் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்றிரவு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மும்பையிலிருந்து கோவைச் சென்றபோது, எனது கிட்டிலிருந்து எனது கிரிக்கெட் பேட்டை (Bat) காணவில்லை. அடுத்தவர்களின் உடைமைகளிலிருந்து பொருள்களை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துச் செல்வது திருட்டத்தனமாகும். எனது பேட்டை யார் திருடினார்களோ, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பேட்டை கண்டுபிடிக்க மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை உதவ வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
-
Plz do 🙏🙏 https://t.co/hz3UKzpdb4
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Plz do 🙏🙏 https://t.co/hz3UKzpdb4
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 7, 2020Plz do 🙏🙏 https://t.co/hz3UKzpdb4
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 7, 2020
இதற்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், "உங்களது சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இந்த விவகாரத்தை உடனடியாக சரிசெய்த பின்னர் உங்களுக்கு தெரிவிக்கிறோம்" என, ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ளது.
இதற்கு ஹர்பஜன் சிங், விரைவில் எனது பேட்டை கண்டுபிடித்து தாருங்கள் என கேட்டுகொண்டார். ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்பஜன் சிங் 160 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆதார் இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் - எமோஷன் காட்டும் ஹர்பஜன்