ETV Bharat / sports

முல்தானின் சுல்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்#HBDvirendersehwag

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான விரேந்திர் சேவாக் தனது 41ஆவது பிறந்தநாளை இன்று தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்.

#HBDvirendersehwag
author img

By

Published : Oct 20, 2019, 3:32 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர், அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மென், பந்துவீச்சாளர்களுக்கு கருணை காட்டாதவர், 99 ரன்னில் இருந்தாலும் சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்யும் துணிச்சல் மிக்கவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாகத்தான் ஆட வேண்டும் என்ற போக்கை சுக்குநூறாக்கியவர், இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான விரேந்தர் சேவாக்.

#HBDvirendersehwag
#HBDvirendersehwag

இந்திய தலைநகரான டெல்லியை சேர்ந்த சேவாக், சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வமுள்ளவராக இருந்ததால், அவரது தந்தையின் வழிகாட்டுதலின்படி அவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். 1997ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணிக்காக சேவாக் முதன்முதலாகக் களமிறங்கினார். அதன் பின்னர் துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது.

அதன்பின் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சேவாக் தனது சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார். ஆனால் அவரின் முதல் போட்டியில் வெறும் ஒரு ரன்னில் அன்றைய பந்துவீச்சு புலியான சோயப் அக்தர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அப்போது அக்தருக்குத் தெரிந்திருக்காது, பின்நாளில் தனது பந்துவீச்சை சேவாக் வேட்டையாடுவார் என்று.

#HBDvirendersehwag
டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்

அதன் பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சேவாக்கிற்கு, அந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர், அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்ததோடு, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

நடுநிலை பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டு வந்த சேவாக், 2001ஆம் ஆண்டு முதன்முதலாக துவக்க வீரராகக் களமிறக்கப்பட்டார். அப்போது அணியின் தொடக்க வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் அந்த வாய்ப்பு சேவாக்குக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சேவாக், நியூசிலாந்துக்கு எதிரான அத்தொடரில் 69 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார்.

#HBDvirendersehwag
இந்திய அணியின் முப்பெரும் ஜாம்பவான்கள்

அதிரடியான ஆட்ட நுணுக்கத்தைக் கொண்ட சேவாக்குக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. 2001ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் சேவாக் களமிறங்கினார். தனது முதல் முதல் போட்டியிலேயே சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார் சேவாக்.

2002ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேவாக்குக்கு ஓப்பனிங் இறங்க வாய்ப்பு கிடைத்தது. இத்தொடரில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியிலும் ஓப்பனிங் இடத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

#HBDvirendersehwag
யுவராஜ் சிங்குடன் சேவாக்

துவக்க ஆட்டக்காரர்கள் என்றாலே நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற வரலாற்றை மாற்றி பந்துகளை சிதறடித்து புது வழியை உருவாக்கினார். சேவாக்குக்கு முன்னர் சில அதிரடி ஓப்பனர்கள் இருந்தாலும், இவரைப் போல தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து சேவாக்குக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த சேவாக்குக்கு 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இடம்கிடைத்தது.

அதன்பின் கங்குலிக்கு காயம் ஏற்படவே, அவருக்குப் பதிலாக சேவாக் மீண்டும் ஓப்பனராகக் களமிறங்கினார். இத்தொடரில் சிறப்பாக விளையாடியதால் நிரந்தர ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சச்சினுடன் இணைந்து விளையாடினார். இதுநாள் வரை சச்சின் - சேவாக் ஜோடி இந்தியாவின் தலைசிறந்த ஓப்பனிங் ஜோடியாக மேற்கோலிடப்படுகிறது.

#HBDvirendersehwagசச்சின் மற்றும் சேவாக்

டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் விளாசியுள்ள சேவாக் இச்சாதனையை நிகழ்த்திய ஒரேயொரு இந்தியர் ஆவார். பாகிஸ்தானுக்கு எதிரான 2003-04 டெஸ்ட் தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அக்தர் பந்துகளை துவம்சம் செய்த சேவாக் ’முல்தானின் சுல்தான்’ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வி.வி.எஸ்.லக்ஸ்மன் 281 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். அப்போது, ”எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் உங்களைப் போல ஆட்டமிழக்காமல் 300 ரன்கள் குவிப்பேன்” என்று லக்ஸ்மனிடம் சேவாக் கூறியுள்ளார். அவ்வாறே பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்கள் குவித்தவுடன் லக்ஸ்மனை நோக்கி பேட்டை உயர்த்திக் காட்டியவாறு தான் கூறியதை சாதித்துக்காட்டியதாக புன்முறுவல் பூத்தார்.

#HBDvirendersehwag
டெஸ்ட் கிரிக்கெட்டில் முற்சதமடித்த மகிழ்ச்சியில் சேவாக்

அதன்பின் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் தனது அபாரமான ஃபார்மை வெளிப்படுத்தினர். இவரின் பங்களிப்புடன் முதலாவது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து அதிரடி ஆட்டதிற்கு பெயர் போன சேவாக், 2009ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 60 பந்துகளில் சதம் விளாசி, குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

#HBDvirendersehwag
டி20 உலககோப்பை வென்ற போது

அவரின் அபார ஃபார்மினால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்தார். அத்தொடரில் அவர் பங்கெடுத்த அனைத்து போட்டிகளின் முதல் பந்திலேயே பவுண்டரிகளை பறக்கவிட்டார். அந்த தொடரில் அவர் தனது அதிரடி ஆட்டத்தினால் எதிரணி பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். இவரின் பங்களிப்பால் 28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதன்பின் அதே ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ருத்ர தாண்டவமாடிய சேவாக், இரட்டை சதம் விளாசி தனது அதிகபட்ச ஸ்கோரை (219) பதிவுசெய்தார். அதற்கு முன்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தார்.

#HBDvirendersehwag
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் சேவாக்

பந்துவீச்சிலும் சிறந்த பங்களிப்பை வழங்கிய சேவாக், நிறைய போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். சச்சின் ஓய்வுக்குப் பிறகு கவுதம் கம்பீருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்த சேவாக், 2015ஆம் ஆண்டு தனது பிறந்த நாளன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய அணிக்காக விளையாடிய சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 2 முச்சதங்கள் என 8,586 ரன்களையும், 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்திய அணிக்காக 251 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற சேவாக் 15 சதங்கள், ஒரு இரட்டை சதம், என 8273 ரன்களையும், 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

#HBDvirendersehwag
ஐபிஎல்லில் பந்துவீசிய சேவாக்

அதே போல் 19 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்ற சேவாக் 2 அரைசதங்களுடன், 394 ரன்களை எடுத்திருந்தார்.

மேலும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடிய சேவாக் 2 சதங்கள், 16 அரை சதங்கள் என 1755 ரன்களை விளாசினார்.

இதையும் படிங்க: இரட்டை சதமடித்து அசத்தினார் ரோஹித் !

Intro:Body:

Happy birthday to Virender Sehwag

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.