ETV Bharat / sports

தோனியை புகழ்ந்த கம்பீர் - Gautam gambhir dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

dhoni
author img

By

Published : Jul 27, 2019, 7:50 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, உலகக்கோப்பைக்கு பின் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதுகுறித்து மவுனம் காத்த தோனி, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என்றும், இந்திய ராணுவத்தின் துணைப் படைப்பிரிவில் சேவை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் தோனி பயிற்சி மேற்கொள்வதற்கான அனுமதியை இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் வழங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ராணுவத்தின் துணைப்பிரிவான பாராச்சூட் ரெஜிமெண்ட் பிரிவில் அவர் இணைந்தார். மேலும் ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தோனி ராணுவத்தில் பணியாற்றுவது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், தோனி ராணுவத்தில் பணியாற்ற எடுத்திருக்கும் முடிவு சிறப்பானது. தோனி பலமுறை ராணுவ உடை அணிய வேண்டும் என என்னிடம் கூறியபோது, ராணுவ உடை அணிய வேண்டும் என்றால் ராணுவத்தில் பணியாற்றி சேவை செய்ய வேண்டும் என நான் கூறியிருக்கிறேன்.

தற்போது தோனி ராணுவத்தில் சேர்ந்து தனது அற்பணிப்பை நிரூபித்துள்ளார். தோனியின் இந்த முடிவு, பல கிரிக்கெட் ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் ராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும். அவருடைய இந்த முடிவுக்கு தலை வணங்குகிறேன் என்று அவர் கூறினார்.

தோனி குறித்து பெரும்பாலும் விமர்சனம் செய்வதையே கவுதம் கம்பீர் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட தோனி ஓய்வு முடிவை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார். ஆனால் தற்போது கவுதம் கம்பீர் தோனியை பாராட்டியிருப்பது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Intro:nullBody:சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீவிபத்து- கோயம்பேடு போலிசார் விசாரணை 

 சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஜோதி டிராவல்ஸ் நிருவனத்தின் இரண்டு பேருந்துகளும், ஜாய் டிராவல்ஸ் ஒரு பேருந்தும் தீயில் முழுமையாக எரிந்து நாசமானது..

 3 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிந்ததால்  அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்துக்கு வந்த ஜெ.ஜெ.நகர் , கீழ்ப்பாக்கம் , கோயம்பேடு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.கோயம்பேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.