கிரிக்கெட் உலகில் சில ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்ற கேள்வி அதிகளவில் வட்டமடித்து வருகிறது. இதே கேள்வி இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீரிடமும் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், '' எனக்கு சச்சின் டெண்டுல்கர்தான். அவர் பெயரைக் கேட்டதும் ஞாபகம் வருவது 30 யார்டு சர்க்கிளுக்குள் நான்கு வீரர்கள் மட்டுமே. அவர் ஆடிய காலத்தில் பவர் ப்ளே, இரண்டு புது பந்துகள் என தற்போதைய சாதகங்கள் எதுவும் அவருக்கு இல்லை.
விராட் கோலியும் சிறப்பாக ஆடிவருகிறார். ஆனால் தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிமுறைகள் உள்ளன. சச்சினுக்கு அப்படியில்லை.
அந்த காலத்தில் 230 முதல் 240 ரன்கள் அடித்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். ரிவர்ஸ் ஸ்விங் என்னும் மந்திரத்தை ஒருநாள் போட்டிகளில் காண முடியவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரை சச்சின்தான் சிறந்த பேட்ஸ்மேன்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அந்தப் பழக்கத்த மாத்தனும்னா பயிற்சி வேணும்' - அஸ்வின்