ETV Bharat / sports

'கங்குலியால் மட்டுமே தோனி கோப்பையை வென்றார்': கம்பீர்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக தோனி வலம் வந்ததற்கு, முன்னாள் கேப்டன் கங்குலி தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

gambhir-feels-ms-dhoni-won-so-many-trophies-because-of-sourav-gangulys-hard-work

author img

By

Published : Jul 12, 2020, 8:48 AM IST

இந்திய அணியின் கேப்டனாக பல்வேறு கோப்பைகளையும் தோனி வென்று கொடுத்துள்ளார். இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வெற்றிகரமான கேப்டனாக தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசுகையில், ''அந்த நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு பந்துவீச்சாளர் ஜாகீர் கான் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளைப் பெற்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தார். ஆனால், அதன் பலன் கங்குலியையே சாரும்.

கங்குலி
கங்குலி

டெஸ்ட் மட்டுமல்ல அனைத்து வகையான போட்டிகளுக்கும் தோனிக்கு சிறந்த அணியே கிடைத்தது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் சச்சின், சேவாக், நான், யுவராஜ், யூசுப், விராட் என அனைத்து வீரர்களும் சிறந்தவர்களாக இருந்தோம். அதனால் அணியை வழிநடத்த தோனிக்கு எளிதாக இருந்தது. கங்குலியின் உழைப்பினால் தோனி பல வெற்றிகளைக் கண்டடைந்தார்'' என்றார்.

இதையும் படிங்க: 'தோனிக்கு நீங்கள் போதுமானவராக இல்லையென்றால்; கடவுளால் கூட உங்களைக் காப்பாற்ற இயலாது' - பத்ரிநாத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.