கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 16ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஊள்ளனர். இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஊரடங்கு உத்தரவின் காரணமாக தனது முடியை தானே திருத்தம் செய்துகொள்ளும் காணொலியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அவரது பதிவில், ‘ஸ்கொயர் கட் விளையாடுவதிலிருந்து, எனது முடி திருத்தும் பணிவரை வித்தியாசமான செயல்களை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது புதிய ஹேர் ஸ்டைல் எப்படிவுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
மேலும் சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ வெளியிட்ட #TeamMaskForce விழிப்புணர்வு காணொலியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்று, வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கடை நிலை டென்னிஸ் வீரர்களுக்கு உதவும் உலகின் முன்னணி வீரர்கள்!