ETV Bharat / sports

கேரளாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டுத் தற்கொலை!

author img

By

Published : Oct 10, 2020, 5:58 PM IST

கேரள ரஞ்சி அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் குமார், இன்று (அக்.10) அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

former-ranji-trophy-player-m-suresh-kumar-found-dead

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் குமார். இவர் 1994 முதல் 2006ஆம் ஆண்டு வரை கேரள ரஞ்சி அணிக்காக விளையாடியுள்ளார்.

இதுவரை 72 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் குமார், 1,657 ரன்களையும், 193 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ், இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில், தூக்கிட்ட நிலையில் சுரேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆலப்புழா காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.