கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்காக விளையாடிய சுதீப் தியாகிக்கு தற்போது 33 வயது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் டி20, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதோடு, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
கடைசியாக இந்தியாவிற்காக 2010ஆம் ஆண்டு விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக 14 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” இந்தக் கடினமான முடிவை எனது கனவுக்கு விடைகொடுக்கவே எடுத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
41 முதல் தர ஆட்டங்களை ஆடியிருக்கும் தியாகி 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோனியுடன் விளையாடியதை நினைவுகூறும் சுதீப் அவருக்கு நன்றித் தெரிவிக்கிறார். தனது முன்னமாதிரிகளான முகமது கைஃப், ஆர்.பி. சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவிப்பதாக தனது ஓய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல்லிலிருந்து தோனி ஓய்வா? ட்விட்டர் கருத்துகளும் ரசிகர்களின் ரியாக்ஷனும்!