ETV Bharat / sports

'2021-ன் முதல் ஏமாற்றம்': நடராஜன் அணியில் இடம்பெறாததால் ட்விட்டரை ஆக்ரமிக்கும் ரசிகர்கள்!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் நடராஜன் இடம்பெறாததையடுத்து, ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'First disappointment of 2021': Fans upset as T Natarajan fails to find place in India's Starting XI vs Australia

author img

By

Published : Jan 7, 2021, 7:10 AM IST

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று(ஜனவரி 7) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இப்போட்டிக்கான இந்திய அணி நேற்றே (ஜனவரி 6) அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவிற்குப் பதிலாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, மற்றொரு அறிமுக வீரர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் 2021ஆம் ஆண்டின் முதல் ஏமாற்றம் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். ஏனெனில், ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தனது அபார பந்துவீச்சு திறனால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர், நடராஜன்.

  • first disappointment of 2021: natarajan not in playing xi for 3rd test.

    — Neeche Se Topper (@NeecheSeTopper) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால், அப்போதே அவர் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்ததால், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர், இத்தொடரில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியதையடுத்து, நடராஜன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதனால், சிட்னி டெஸ்ட் போட்டியில் நிச்சயம் நடராஜன் விளையாடுவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

  • Natarajan. Left-arm. It seems like the curator could leave a hint of grass. There could be a bit of moisture. With his angle... you can make a case for this bowler.

    Shardul is a honest-trier in fc cricket.

    All I'm saying is you can make a case for any of the three. https://t.co/Z9p6mtKtU1

    — Bharath Ramaraj (@Fancricket12) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால், நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடராஜனுக்குப் பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால், ஆவேசமடைந்த ரசிகர்கள், ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோரின் பதிவில் இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளரின் தேவை நீண்ட காலமாக இருந்துவரும் சூழலில், தற்போது சிறப்பாக பந்துவீசிவரும் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வியே பெரும்பான்மையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: 'மும்பையின் பிராட்மேன் சுனில் கவாஸ்கர்’ - ரவி சாஸ்திரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.