ETV Bharat / sports

'ஐபிஎல் பேட்ஸ்மேன்களுக்கானது; பிஎஸ்எல் பவுலர்களுக்கானது' - சைனாப் அப்பாஸ் - தொலைக்காட்சியின் தொகுப்பாளர் சைனாப் அப்பாஸ்

பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சி தொகுப்பாளினி சைனாப் அப்பாஸ், தனது வாழ்க்கைப் பயணம் குறித்து ஈடிவி பாரத் செய்திகளிடம் பகிர்ந்துள்ளார்.

exclusive-ipl-is-ruled-by-batters-and-psl-is-ruled-by-bowlers-feels-zainab-abbas

author img

By

Published : Aug 1, 2020, 11:57 PM IST

டிவி தொகுப்பாளர்களின் மீது எப்போதும் அனைவருக்கும் ஒரு பிரியம் இருக்கும். அவர்களின் ஆடை, வசனங்கள், குரல், ஸ்டைல் என அனைத்தும் கண்காணிக்கப்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தவறு செய்தால், மீண்டும் டேக் செல்லலாம். ஆனால், விளையாட்டுத் தொகுப்பாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. ரசிகர்களை வரவேற்பதில் தொடங்கி, ஆட்டத்தின் ஆடும் அணிகளின் சாதக, பாதகங்கள், என்ன தவறு செய்தார்கள், யார் ஆதிக்கம் செலுத்தினார்கள் என அனைத்தையும் நேரலையில் ஆராய்ந்து வேகமாகக் கூற வேண்டும்.

அதில் ஏதேனும் தவறு நடந்தால், உடனடியாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், ஒரு சில தொகுப்பாளர்கள் இதனைச் சர்வ சாதாரணமாக நேரலையில் கூறிச் செல்வார்கள். அப்படி ஒருவர்தான் தொகுப்பாளினி சைனாப் அப்பாஸ்.

சைனாப் அப்பாஸ் நேர்காணல்

பாகிஸ்தானின் பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி சைனாப் அப்பாஸ். பாகிஸ்தானைக் கடந்தும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். நம்ம ஊரில் மயாந்தி லாங்கர் எப்படியோ, அதேபோல்தான் பாகிஸ்தானில் சைனாப் அப்பாஸ். சமீபத்தில், ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த நபர்களின் 100 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

இவர் தனது வாழ்க்கைப் பயணம் பற்றி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேக நேர்காணலில் பேசியுள்ளார். அந்த நேர்காணலில், ''ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக உள்ளது. எனது வேலைக்கு கிடைத்த ஊதியமாகவே இதைப் பார்க்கிறேன்.

எனது பயணம் பொறியாளராகதான் தொடங்கியது. இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். எனது இங்கிலாந்து விசா முடிவுக்கு வந்தபோது, வேறு துறையில் பணியாற்றலாம் என எண்ணினேன். அப்போது ஃபேஷன் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

பின்னர் சில வகுப்புகளில் பங்கேற்றேன். அந்த நேரத்தில் பாகிஸ்தான் விளையாட்டுத் தொலைக்காட்சிக்கு நேர்காணல் நடந்தது. அதில் பங்கேற்றபோது, என்னோடு அந்நிறுவனம் ஒரு மாதம் ஒப்பந்தம் செய்தது.

அந்த மாத காலத்தில் நான் எனது திறமையை வெளிப்படுத்தியதால், ஒப்பந்தத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

சைனாப் அப்பாஸ் நேர்காணல்

ஐபிஎல் தொடருக்கும், பிஎஸ்எல் தொடருக்கும் பன்மடங்கு வித்தியாசங்கள் உண்டு. ரசிகர்கள், மைதானம், வணிகம் என அனைத்திலும் பெரும் வித்தியாசம் உண்டு. என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கானது. பிஎஸ்எல் தொடர் பவுலர்களுக்கானது'' என்றார்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் இருக்கு - ஹர்ஷா போக்லே ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.