பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பிப்.20ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் முதல் பிஎஸ்எல் தொடர் என்பதால் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டெயின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிஎஸ்எல் தொடரில் ஆடவுள்ளதையும், இஸ்லாமாபாத் அணியுடன் சேரவுள்ளதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எங்களுக்கு ஆதரவளியுங்கள். போட்டியின்போது சந்திக்கலாம்'' என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
-
See you soon Pakistan! @IsbUnited @thePSLt20 #TayyarHain #HBLPSLV pic.twitter.com/A09k2ns1xQ
— Dale Steyn (@DaleSteyn62) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">See you soon Pakistan! @IsbUnited @thePSLt20 #TayyarHain #HBLPSLV pic.twitter.com/A09k2ns1xQ
— Dale Steyn (@DaleSteyn62) February 15, 2020See you soon Pakistan! @IsbUnited @thePSLt20 #TayyarHain #HBLPSLV pic.twitter.com/A09k2ns1xQ
— Dale Steyn (@DaleSteyn62) February 15, 2020
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வுபெற்ற ஸ்டெயின், தென் ஆப்பிரிக்க அணிக்காக டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார். பிஎஸ்எல் தொடரில் டேல் ஸ்டெயின் பங்கேற்கவுள்ளது பாகிஸ்தான் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விட்டுவைத்த களத்திலே சிங்கம் ஒன்று நுழையுதோ!