ETV Bharat / sports

117 நாள்களுக்கு பின் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி; இங்கிலாந்து பேட்டிங்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

ENGvsWI: England won the toss choose to bat first

author img

By

Published : Jul 8, 2020, 6:53 PM IST

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செளதாம்டனில் தொடங்கவிருந்தது.இன்று தொடங்கும் இத்தொடர் ஜூலை 28-ஆம் தேதி வரை பார்வையாளர்களின்றி காலியான மைதானங்களில் நடைபெறவுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக 117 நாள்களுக்கு பின் நடைபெறும் முதல் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால், திட்டமிட்ட நேரத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மழை நின்றதால் ஆட்டம் தொடங்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இங்கிலாந்து அணி: ரோரி பர்ன்ஸ், ஜோ டெய்லி, டாம் சிப்லி, ஜாக் க்ராவ்லே, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஒலி போப், ஜாஸ் பட்லர், டாம் பேஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜான் கேம்பல், திரைக் பிராத்வெயிட், ஷமாரா ப்ரூக்ஸ், ஷாட் ஹோப், ரோஸ்டான் சேஸ், ஜெர்மைன் பிளக்வுட், ஷேன் டாவ்ரிச், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), அல்சாரி ஜோசப், கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.