ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

cricket
author img

By

Published : Nov 1, 2019, 5:36 PM IST

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று கிறிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் ஆறு ரன்களில் சாம் குர்ரான் பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

cricket
ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்த கப்தில்

அதன்பின் சிறிது நேரம் தாக்குப்பிடித்த கோலின் முன்ரோ 21, கோலின் டி கிராண்ட்ஹோம் 19, டிம் செய்பெர்ட் 32 எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 94 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அனுபவ வீரர் ராஸ் டெய்லர், டேரி மிட்சல் ஆகியோர் அடித்து ஆடத் தொடங்கினர்.

cricket
இங்கிலாந்து அணி

இந்த இணை ஐந்தாவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ராஸ் டெய்லர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 2, அடில் ரஷித், சாம் குர்ரான், பேட்ரிக் ப்ரவுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து சேஸிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மாலன் 11 ரன்களில் வெளியேறினார். எனினும் ஜானி பெய்ர்ஸ்டோ 35, ஜேம்ஸ் வின்ஸ் 59 ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர்.

இறுதிக்கட்டத்தில் கேப்டன் இயான் மார்கன் 34, சாம் பில்லிங்ஸ் 14 ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Intro:Body:

new zealand vs england

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.