மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பாகிஸ்தான்-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்குத் தொடக்க வீராங்கனைகள் ஜோன்ஸ், வையட் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் டயானா பேக் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் ஜாவேரியா கான் மட்டும் நிலைத்து ஆடி அரைசதமடித்தார்.
-
England complete 3-0 whitewash over Pakistan after defeating them by 26 runs in the third T20I.#PakWvEngW Report 👇 https://t.co/xFz205gQEj
— ICC (@ICC) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">England complete 3-0 whitewash over Pakistan after defeating them by 26 runs in the third T20I.#PakWvEngW Report 👇 https://t.co/xFz205gQEj
— ICC (@ICC) December 20, 2019England complete 3-0 whitewash over Pakistan after defeating them by 26 runs in the third T20I.#PakWvEngW Report 👇 https://t.co/xFz205gQEj
— ICC (@ICC) December 20, 2019
மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்ததினால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி மூன்றாவது டி20 போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதையும் படிங்க:பட்டய கௌப்புன வெய்யிலால ஆட்டத்த ரத்துபன்ன ஆஸ்திரேலியா..!