ETV Bharat / sports

டெஸ்ட்டில் 5,00,000 ரன்கள் அடித்த இங்கிலாந்து! - டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணிகள்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஐந்து லட்சம் ரன்கள் அடித்த முதல் அணி என்ற மைல்கள் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

england-the-first-team-to-reach-half-a-million-test-runs

author img

By

Published : Jan 26, 2020, 1:50 PM IST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்கில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 5 லட்சம் ரன்களைக் கடந்த முதல் அணி என்ற மைல்கள் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இங்கிலாந்து அணி இச்சாதனையை தனது 1002ஆவது டெஸ்ட் போட்டியில் எட்டியுள்ளது.

Eng vs SA 4th Test: Wood stars as England take upper hand
சாக் கிராலே

இங்கிலாந்து அணிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 832 டெஸ்டில் 4,32,706 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 540 டெஸ்ட்டில் 2,73,518 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதையடுத்து, இப்போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் சாக் கிராலே 66, ஜோ ரூட் 59, ஓலி போப் 56 ரன்கள் அடித்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அன்ரிச் நார்டே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன்குவிப்பில் தடுமாறிவருகிறது.

இங்கிலாந்து வீரர்கள்

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 41.5 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. டி காக் 32 ரன்களுடன் விக்கெட் இழக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் மூன்று, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 'புதிய பெருஞ்சுவர்' புஜாரா!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.