ETV Bharat / sports

‘சென்னை மைதானம் சவாலானது’ - ஜீதன் பட்டேல் - விராட் கோலி

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெறும் சென்னை மைதானம் சவாலான ஒன்றாக அமைந்திருக்கிறது என இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஜீதன் பட்டேல் தெரிவித்துள்ளார்.

England spin consultant Patel says his players know it's going to spin in sub-continent

author img

By

Published : Feb 16, 2021, 11:13 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஜீதன் பட்டேல், “துணைக் கண்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், சுழற்பந்துவீச்சுக்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளோம். ஏனெனில் சென்னையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது.

சென்னை மைதானத்தைப் பொறுத்தவரை, வேகம் அவ்வளவாக இல்லை என்றாலும், நன்றாக ‘ஸ்விங்’ ஆகிறது. இதை வைத்தே துணைக்கண்டத்தில் எவ்வாறு பந்துவீசுவது என்பதைத் தெரிந்துகொண்டோம்.

ஆனால் இங்கிலாந்து மைதானங்களின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. எங்கள் நாட்டில் இருக்கும் அனைத்து மைதானங்களும் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானவை.

சென்னை மைதானம் சவாலானது

மேலும் விராட் கோலி - அஸ்வினின் பார்ட்னர்ஷிப் அருமையாக இருந்தது. அதிலும் அஸ்வினின் சதம் சிறப்பானது. அவர்கள் எங்களுக்கு 483 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

சென்னை மைதானத்தில் இதனைச் செய்வது நடக்குமா எனத் தெரியவில்லை, இருப்பினும் நாங்கள் எங்களது அனைத்து முயற்சிகளையும் செயல்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீயே ராஜா, நீயே மந்திரி- அஸ்வினை புகழ்ந்து தள்ளும் ட்விட்டர்வாசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.