தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று 4.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் நேற்று இருநாட்டு வீரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனை முடிவில், தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
-
In the interests of the safety and well-being of both teams, match officials, and all involved in the match, the Acting CEO of CSA, Kugandrie Govender as well as the CEO of the ECB, Tom Harrison, have agreed to postpone the first fixture to Sunday. #SAvENG #BetwayODI
— Cricket South Africa (@OfficialCSA) December 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In the interests of the safety and well-being of both teams, match officials, and all involved in the match, the Acting CEO of CSA, Kugandrie Govender as well as the CEO of the ECB, Tom Harrison, have agreed to postpone the first fixture to Sunday. #SAvENG #BetwayODI
— Cricket South Africa (@OfficialCSA) December 4, 2020In the interests of the safety and well-being of both teams, match officials, and all involved in the match, the Acting CEO of CSA, Kugandrie Govender as well as the CEO of the ECB, Tom Harrison, have agreed to postpone the first fixture to Sunday. #SAvENG #BetwayODI
— Cricket South Africa (@OfficialCSA) December 4, 2020
சர்வதேச கிரிக்கெட்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட முதல் போட்டியாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட லூயிஸ் சுவாரஸ்