ETV Bharat / sports

கிரிக்கெட்டின் 'வொண்டர் வுமன்' எல்லிஸ் பெர்ரி - ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், 1000 ரன்கள் அடித்து 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி படைத்துள்ளார்.

கிரிக்கெட்டின் 'வொன்டர் வூமேன்' எல்லிஸ் பெர்ரி
author img

By

Published : Jul 29, 2019, 12:45 PM IST

மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். தற்போது, ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து, 122 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லான்னிங், எல்லீஸ் பெர்ரி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், 17.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டியது.

Ellyse perry
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் எல்லிஸ் பெர்ரி

இதனால், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், எல்லிஸ் பெர்ரி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸின் விக்கெட்டை எடுத்தார். சர்வதேச டி20 போட்டியில் அவர் எடுக்கும் 100ஆவது விக்கெட்டாகும்.

இதுமட்டுமின்றி, இப்போட்டியில் நான்கு பவுண்ட்ரி, ஒரு சிக்சர் என 47 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் அடித்து, 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சூப்பர் சாதனையை இவர் படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, ட்விட்டரில் எல்லிஸ் பெர்ரி #EllysePerry என்ற ஹேஸ்டேக் அதிகம் ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.