கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீடுகளிலேயே ஓய்வில் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகள் இல்லாத நிலையில், ரசிகர்களை உயிர்ப்புடன் வைக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் காணொலி மூலம் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர்.
யுவராஜ் சிங், பும்ரா, ஹர்பஜன், கைஃப், அஷ்வின், வார்னர் என நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பலரும் பழைய சம்பவங்களைப் பற்றி பேசுவது ரசிகர்களுக்கு சில நாஸ்டால்ஜியா நினைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், பங்கேற்ற நேர்காணலில் அவரிடம், 'ஊரடங்கு காலம் முடிந்தவுடன் யாருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட ஆசைப்படுகிறீர்கள்' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ' ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி. அவருடன்தான் இரவு உணவு சாப்பிட ஆசைப்படுகிறேன்' என்றார்.
-
An off-field conversation between @EllysePerry and @PathakRidhima filled with some googly questions 😮, out of the park answers🤩, well-judged tackles 😎 and rapid 🔥 right on the 💸#SonyTenPitStop #CricketWithoutBoundaries #CricketAustralia #Australia #SonySports @CricketAus pic.twitter.com/V6Weqj2QET
— Sony Sports (@SonySportsIndia) May 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An off-field conversation between @EllysePerry and @PathakRidhima filled with some googly questions 😮, out of the park answers🤩, well-judged tackles 😎 and rapid 🔥 right on the 💸#SonyTenPitStop #CricketWithoutBoundaries #CricketAustralia #Australia #SonySports @CricketAus pic.twitter.com/V6Weqj2QET
— Sony Sports (@SonySportsIndia) May 2, 2020An off-field conversation between @EllysePerry and @PathakRidhima filled with some googly questions 😮, out of the park answers🤩, well-judged tackles 😎 and rapid 🔥 right on the 💸#SonyTenPitStop #CricketWithoutBoundaries #CricketAustralia #Australia #SonySports @CricketAus pic.twitter.com/V6Weqj2QET
— Sony Sports (@SonySportsIndia) May 2, 2020
இந்த பதில் சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகியது. தற்போது நேற்று தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் எல்லீஸ் பெர்ரி பங்கேற்றார். அப்போது முரளி விஜய்யின் ஆசைப் பற்றி பெர்ரியிடம் கூறப்பட்டது. அதற்கு அவர், ' அவர் உணவுக்கான கட்டணத்தை அளிப்பதாக இருந்தால் நிச்சயம் சாப்பிடலாம்' என நகைச்சுவையாக பதிலளித்தார்.
கடந்த தசாப்தத்தில் விஸ்டன் பத்திரிகை சார்பாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து சிறந்த கிரிக்கெட்டர்களில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், டேல் ஸ்டெய்ன், டி வில்லியரஸ் ஆகியோரின் பெயர்களோடு எல்லீஸ் பெர்ரியின் பெயரும் இடம்பெற்றது.
இதையும் படிங்க: ஸ்டெய்ன், லீ ஆகியோரால் கஷ்டப்பட்ட ரோஹித் ஷர்மா...!