கௌதம் காம்பீர் பாஜக சார்பாக கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வென்றார். எம்.பி. ஆன பிறகு, அவர் கீதா காலனி பகுதியில் அமைந்துள்ள ஷம்ஷாத் கேட்டை பார்வையிட்டார்.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது மக்களவைத் தொகுதியில் தகனம் செய்யும் இடங்களின் பராமரிப்பு, தூய்மை மற்றும் அடிப்படை ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறும் மாத வருமானத்திலிருந்து பராமரிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.