சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்தார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் அவர் இருந்து வந்த நிலையில், 401 நாள்களுக்குப் பிறகு அவர் ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஓய்வுக்குப் பிறகான தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஸ்மிருதி மந்தனா வீடியோ ஒன்றை வெளியிட்டு தோனிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், ''2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டிங்கிற்காக தோனி களமிறங்கிய தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது அவருடைய முகத்தில் இருந்த நம்பிக்கை, எனக்கு இன்று வரை ஊக்கமளிக்கிறது.
ஒரு கிரிக்கெட்டராக, ஒரு தலைவனாக, எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதராக பலரையும் அவர் ஊக்கப்படுத்தியுள்ளார். உங்கள் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக வாழ்த்துகள் சார்'' எனப் பேசியுள்ளார்.
-
“He has inspired everyone around him to be a better cricketer, leader and most importantly, a better human being,” #TeamIndia batter @mandhana_smriti hails “inspirational” @msdhoni.#ThankYouMSDhoni pic.twitter.com/7fh3LKTvDI
— BCCI Women (@BCCIWomen) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“He has inspired everyone around him to be a better cricketer, leader and most importantly, a better human being,” #TeamIndia batter @mandhana_smriti hails “inspirational” @msdhoni.#ThankYouMSDhoni pic.twitter.com/7fh3LKTvDI
— BCCI Women (@BCCIWomen) August 17, 2020“He has inspired everyone around him to be a better cricketer, leader and most importantly, a better human being,” #TeamIndia batter @mandhana_smriti hails “inspirational” @msdhoni.#ThankYouMSDhoni pic.twitter.com/7fh3LKTvDI
— BCCI Women (@BCCIWomen) August 17, 2020
ஸ்மிருதி மந்தனாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #ThankYouMahi முடிவுக்கு வந்த இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம்!